தேவிஉமை மீனாட்சி தேவ தேவி திருநெல்லை காமாட்சி என்று சொல்லித் தினம்வணங்கும அடியவர்க்குத் திருக்கண் காட்டித் திகழ்கின்ற பெருமாட்டி சமிவ னத்தில் கூவுமயில் உன்நாமம் ஓதி ஓதிக் கொண்டாடத் தோகைமயில் நடன மாடக் குளிர்சோலை மலரணிந்த கூந்தல் ஆடிக் கொண்டிருக்க வன்னிவனம் வந்த மர்ந்த ஓவியமே கொற்றவாள் ஈச னுக்கே உகந்தவள்நீ நால்வர்சொல் திருமு றைக்கே உட்பொருளாய் இருப்பவளே உலகு காக்க உதித்தவளே உன்னடிகள் நெஞ்சில் வைத்தோர் ஆவியெனத் திகழ்வளே அழகார் கொன்றை அணிந்தசிவன் பத்தினியே அம்பு யத்தாள் அடிமலர்கள் துணையென்பார் வாழ்வு யர்த்தும் ஆரணங்கே எம்முயிரே அழகே காக்க காப்பியக் கவிஞர் - நற்றமிழ் நாவலர் - நா.மீனவன்
Comments
Post a Comment