திருநெல்லை
ஏறூர்ந்தான் காதலியே இமயரசன் திருமகளே
இனியமறைக் கருப்பொருளே! ஆல வாயில்
இருப்பவளே! சொக்கனுக்கு வலத்தே நின்ற
இளங்குயிலே! செந்தமிழ்நற் பாண்டி நாடு
மாறாதே ஆள்கின்ற மாதரசி தென்பொதிய
மலைத்தென்றல் கொண்டுவரும் மணத்தை ஏற்று
மகிழ்கின்ற மங்கையே! ஆழி தாங்கும்
மாலுக்குத் தங்கையே! சுடலைச் சாம்பல்
ஏறிடவே காடாடும் ஈசன்மகிழ் பெண்பாவாய்
ஏதங்கள் தனைப்போக்கி எம்மை ஆளும்
ஏந்திழையே! வன்னிவனம் இருக்கும் தாயே!
எழிற்கொற்ற வாளீசன் வலத்தே நின்றாய்
ஆறதனைத் தாங்குமுடி ஆண்டவர்க்கு மனையாட்டி
அம்புயத்தாள்
பரமேட்டி ஆனாய் நீயே
அருள்தருமோர்
கொற்றவையே நெல்லை என்னும்
ஆரணங்கே
உன்பெருமை சொல்லப் போமோ
காப்பியக் கவிஞர் – நற்றமிழ் நாவலர் – நா.மீனவன்
Comments
Post a Comment