Posts

Showing posts with the label தலைமை

கந்தசஷ்டிக் கவியரங்கம் - தலைமை

Image
கந்தசஷ்டிக் கவியரங்கம் - தலைமை அன்புடைய  பெரியோரே ஆன்றோரே சான்றோரே நம்பிக்கை கொண்டிருக்கும் நாளைய இளைஞர்களே சங்கப் பொறுப்பாளர் சார்ந்துள்ள உறுப்பினர்கள் இங்கெங்கள் கவிகேட்க வந்துள்ள நண்பர்களே இந்தத்  திருநாட்டின் எழுச்சிக்கே உயிர்தந்த சந்தத் தமிழ்க்கவிஞன் சான்றாண்மைப் பாரதியார் இந்துமத அபிமான சங்கத்தில் வந்தநாள் இந்தநாள் என்பதனை இனியமுறை கொண்டாட ஊர்முழுதும வலமவந்து உவகையுடன் அமர்ந்துள்ள பாரதிதமிழ்க் கழகத்துப் பண்பாளர்க் கென்வணக்கம் அடக்கமுள்ள நடராசன் தொடங்கிவைத்துச் சிறப்பிக்க அடுத்துவரும் கருத்தரங்கம் அதைநடத்தக் காத்திருக்கும் நற்கதை  நம்பியாம் நம்முடைய அய்க்கணுக்கும இச்சங்கச் செயலர் இராமசாமி அவர்களுக்கும அழகான சிறப்புரைசொல ஆறு.மெய் யாண்டவர்க்கும் பாரதியின் பரம்பரையில் கவிதைப பயிராகி நேர்மையுள்ள கவிஞர் நிரஞ்சன் பாரதிக்கும் நெஞ்சையள்ளும செந்தமிழால் நெஞ்சார வணங்குகிறேன. இனிய திருக்குறளில் எழுசீர்கள் அமைந்ததுபோல் ஏழு கவிவாணர் இவ்வரங்கம் வந்துள்ளார் பாரதியார் கவிதைகளில் பதிந்துள்ள கருத்துகளில் பொதிந்துள்ள உண்மைகளைப் பூந்தமிழில் ஓதவந்தார் ஆள்குறை...