கந்தசஷ்டிக் கவியரங்கம் - தலைமை

கந்தசஷ்டிக் கவியரங்கம் - தலைமை


அன்புடைய  பெரியோரே ஆன்றோரே சான்றோரே
நம்பிக்கை கொண்டிருக்கும் நாளைய இளைஞர்களே
சங்கப் பொறுப்பாளர் சார்ந்துள்ள உறுப்பினர்கள்
இங்கெங்கள் கவிகேட்க வந்துள்ள நண்பர்களே
இந்தத்  திருநாட்டின் எழுச்சிக்கே உயிர்தந்த
சந்தத் தமிழ்க்கவிஞன் சான்றாண்மைப் பாரதியார்
இந்துமத அபிமான சங்கத்தில் வந்தநாள்
இந்தநாள் என்பதனை இனியமுறை கொண்டாட
ஊர்முழுதும வலமவந்து உவகையுடன் அமர்ந்துள்ள
பாரதிதமிழ்க் கழகத்துப் பண்பாளர்க் கென்வணக்கம்
அடக்கமுள்ள நடராசன் தொடங்கிவைத்துச் சிறப்பிக்க
அடுத்துவரும் கருத்தரங்கம் அதைநடத்தக் காத்திருக்கும்
நற்கதை  நம்பியாம் நம்முடைய அய்க்கணுக்கும
இச்சங்கச் செயலர் இராமசாமி அவர்களுக்கும
அழகான சிறப்புரைசொல ஆறு.மெய் யாண்டவர்க்கும்
பாரதியின் பரம்பரையில் கவிதைப பயிராகி
நேர்மையுள்ள கவிஞர் நிரஞ்சன் பாரதிக்கும்
நெஞ்சையள்ளும செந்தமிழால் நெஞ்சார வணங்குகிறேன.
இனிய திருக்குறளில் எழுசீர்கள் அமைந்ததுபோல்
ஏழு கவிவாணர் இவ்வரங்கம் வந்துள்ளார்
பாரதியார் கவிதைகளில் பதிந்துள்ள கருத்துகளில்
பொதிந்துள்ள உண்மைகளைப் பூந்தமிழில் ஓதவந்தார்
ஆள்குறைவே என்றாலும் அச்சமில்லை எங்களுக்கு
இந்தநிலை பாரதிக்கும் இருந்தநிலை என்பதனால்
ஆள்குறைவே என்றாலும் அச்சமில்லை எங்களுக்கு

பாரதியும் பெண்மையும் - சண்முக சுந்தர மீனாள்
சபையில முதற்பாடும் சண்முகசுந் தரமீனாள்
தஞ்சைக் கதம்பம்போல் கவிமணக்கப் பாடுவார்
திருப்புத்தூர்த் தமிழரசி திருநாடு வாழவெனக்
கவிபடைத்த பாரதியின் கவிதைகளைச் சுவாசித்துச்
சாரத்தைத் தன்கவிதைச் சத்தாக்கித் தரவந்த
பாசமுள்ள கவியரசி பாரதிசொல் பெண்மையினை
நேசமுடன் சொல்க நினைத்து.

பாரதியும சமத்துவமும் - மனோ இளங்கோ
கவியில் சரவெடியைக் காட்டும் தமிழ்க்கவிஞன்
நகராட்சிப் பணியெனினும் நல்லகவி இவன்படைப்பான்
பாரதி தாசனைப்போல் பாவரையும் கருத்தாளன்
புரட்சிக் களமேறிப் புதுக்கவிதை வாள்சுழற்றும்
காரைக் குடித்தம்பி பாடிவரும் தமிழ்த்தும்பி
தமக்கனைத்தும் வேண்டுமெனத்; தான்நினைப்பார் வாழுலகில்
சமத்துவமே  வேண்டுமெனச் சபையிலே பாடுதற்குப்
பாரதியார் சொல்லிவைத்த பாடல்களின் துணைகொணடு
மனோஇளங்கோ மன்றேறிப் பாடுகிறான் பாடவரும்
குயிலேநீP வந்திங்கு கூவு.

பாரதியும் புதுமையும – கனவுதாசன்
மான கிரியான் கவிமயக்கில் இவன்திரிவான்
சமுதாயத் தீமைகளைப பாட்டால் இவன்விரிப்பான்
ஓசைநயம்  உள்ளகவிப பாட்டுக்கு இவன்உரியான்
கனவுக்குத் தாசன் கவிதைகளால் நம்உள்ளத்தைக்
களவாடும் தாசன் அதனால்இவன் களவுதாசன்
இவனுடைய பாட்டெல்லாம் பீரங்கி வேட்டாகும
குததூசி போலவிங்கே குததும் இவன்பாட்டு
தன்வழி தனிவழியாய்க கொண்டகவி கனவுதாசன்
பாரதிக்குள் நுழைந்து பழமையினைப் பாடாமல்
பொங்கும் புதுமையினைப் போற்றித் துதிபாடி
இங்கு வரவழைக்க எழுகின்றான் உன்தமிழைத்
தங்கு தடையின்றித் தா.

பாரதியும் பாரதமும் - ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
கவிசிறந்த மிக்கேல் கருணையுள்ள ஏசுபிரான்
புவிகாத்த பெருமைககுப் பொழுதெல்லாம் நன்றிசொல்வோன்
பொதிய மலையிருந்து புறப்பட்ட தென்றலிலே
நதிவழியே நாடுவந்த நல்லதொரு தமிழ்மொழியைக்
கண்ணென்று கருதுகிற கவிஞர்களில் இவன்pளையன்
வாழ்விலே ஒருநாளும் வசந்தத்தைக் காணாத
பாட்டனாம் பாரதியை பாராட்டி மகிழ்ந்தவர்கள்
இக்காலம் ஏராளம்  என்னசெய்ய பாரதியைப்
பட்டினியாய் விட்டவர்கள் பாராட்டோ பிற்காலம்
அன்றுவிட்ட பாரதமும்  இன்றுதொட்ட பாரதமும்
கன்றுதொட்டுப் பாடுவதைக் காதாலே கேளுங்கள்
பாரதத்தில் அதன்புகழைப் பாடுகின்ற மிக்கேல்ராஜ்
கொண்டுவந்த பாடலைக் கொடு

பாரதியாரும் தமிழும் - செயங்கொண்டான்
கலைவாணி பள்ளிக்குக் கருவூலம் இவனாவான்
குறளைத்  தினம்பரப்பக் குரல்கொடுத்து வாழுகிறான்
தன்னைத் தமிழுக்கே தந்திருக்கும் செயங்கொண்டான்
செய்யாத  சாதனைகள் செகத்தில் ஏதுமில்லை
பாசமோ தமிழிடத்தில் பழகுவதோ சிலரிடத்தில்
இல்லாத கலையில்;லை சொல்லிடவோ சொற்களில்லை
சொல்லே இவனால்தான் சுவைபெற்றுத் திகழ்கிறது
தமிழனாய்ப் பிறந்து தமிழனாய்த் தான்வாழ்ந்து
குலத்தால் அய்யராய்க் கொள்கையிலே தமிழ்மகனாய்
இருக்கின்ற பாரதியைத் தமிழோடு பாடவரும்
செயங்கொண்டான் அரங்கேறிக் கவிதையிலே செயங்கொள்ளப்
பாரதியின் தமிழதனைப் பாடு.

பாரதியும் இயற்கையும – வேலாயுத ராசா
கற்பித்தல் வரலாறு பாடுவதோ தமிழ்ப்பாட்டு
கவிதைவேல் கையெடுத்துக் களமேறும் தமிழ்ராசா
பார்க்கும் இடமெல்லாம் பரந்துள்ள நாற்றுக்கள்
தாம்பிர பரணிநதித் தண்ணீரில் தமிழ்குடித்தோன்
பச்சைநிற வயல்களெலாம் பரந்தாமன் எனக்கருதும்
பாட்டுப் பறவை பாரதிதன் கவிதையிலே
குயில்பாட்டில் இயச்கைவளம் கொஞ்சிவிளை யாடுவதைத்
தன்பாட்டில் பதிவாக்கித் தரவந்த ராசகவி
உன்பாட்டை இங்குவந்தே ஓது.

பாரதியும் தாசனும் - பொற்கிழிக் கவிஞர்.கா.நாகபபன்
அன்பிற் கினியவனே ஆற்றலுள்ள நாகப்பா
பொற்கிழியைப பெற்றிட்ட புலவா உயர்பள்ளித
தலைமை ஆசானே தனித்தவழிக் கவிபாடும்
அன்பன்நல் அறிவுடையான் ஆற்றல்மிகு கவியுடையான்
என்புருகத் தமிழ்வடித்த ஏற்றமுள்ள பாரதியைத்
தாசனுடன் அவன்கொண்ட தமிழ்த்தொடர்பின் மகத்துவத்தைப்
புரட்சிக் கவிஞனது புதுச்சேரி அனுபவத்தை
வண்ணக் கவிதையிலே வடித்தெடுத்துக் கொண்டுவந்த
கவிதையினை இங்கேநீ காட்டு

Comments

Popular posts from this blog