- Get link
- X
- Other Apps
Posts
- Get link
- X
- Other Apps
தேவிஉமை மீனாட்சி தேவ தேவி திருநெல்லை காமாட்சி என்று சொல்லித் தினம்வணங்கும அடியவர்க்குத் திருக்கண் காட்டித் திகழ்கின்ற பெருமாட்டி சமிவ னத்தில் கூவுமயில் உன்நாமம் ஓதி ஓதிக் கொண்டாடத் தோகைமயில் நடன மாடக் குளிர்சோலை மலரணிந்த கூந்தல் ஆடிக் கொண்டிருக்க வன்னிவனம் வந்த மர்ந்த ஓவியமே கொற்றவாள் ஈச னுக்கே உகந்தவள்நீ நால்வர்சொல் திருமு றைக்கே உட்பொருளாய் இருப்பவளே உலகு காக்க உதித்தவளே உன்னடிகள் நெஞ்சில் வைத்தோர் ஆவியெனத் திகழ்வளே அழகார் கொன்றை அணிந்தசிவன் பத்தினியே அம்பு யத்தாள் அடிமலர்கள் துணையென்பார் வாழ்வு யர்த்தும் ஆரணங்கே எம்முயிரே அழகே காக்க காப்பியக் கவிஞர் - நற்றமிழ் நாவலர் - நா.மீனவன்
- Get link
- X
- Other Apps
திருநெல்லை ஏறூர்ந்தான் காதலியே இமயரசன் திருமகளே இனியமறைக் கருப்பொருளே! ஆல வாயில் இருப்பவளே! சொக்கனுக்கு வலத்தே நின்ற இளங்குயிலே! செந்தமிழ்நற் பாண்டி நாடு மாறாதே ஆள்கின்ற மாதரசி தென்பொதிய மலைத்தென்றல் கொண்டுவரும் மணத்தை ஏற்று மகிழ்கின்ற மங்கையே! ஆழி தாங்கும் மாலுக்குத் தங்கையே! சுடலைச் சாம்பல் ஏறிடவே காடாடும் ஈசன்மகிழ் பெண்பாவாய் ஏதங்கள் தனைப்போக்கி எம்மை ஆளும் ஏந்திழையே ! வன்னிவனம் இருக்கும் தாயே ! எழிற்கொற்ற வாளீசன் வலத்தே நின்றாய் ஆறதனைத் தாங்குமுடி ஆண்டவர்க்கு மனையாட்டி அம்புயத்தாள் பரமேட்டி ஆனாய் நீயே அருள்தருமோர் கொற்றவையே நெல்லை என்னும் ஆரணங்கே உன்பெருமை சொல்லப் போமோ காப்பியக் கவிஞர் – நற்றமிழ் நாவலர் – நா . மீனவன்
கந்தசஷ்டிக் கவியரங்கம் - தலைமை
- Get link
- X
- Other Apps
கந்தசஷ்டிக் கவியரங்கம் - தலைமை அன்புடைய பெரியோரே ஆன்றோரே சான்றோரே நம்பிக்கை கொண்டிருக்கும் நாளைய இளைஞர்களே சங்கப் பொறுப்பாளர் சார்ந்துள்ள உறுப்பினர்கள் இங்கெங்கள் கவிகேட்க வந்துள்ள நண்பர்களே இந்தத் திருநாட்டின் எழுச்சிக்கே உயிர்தந்த சந்தத் தமிழ்க்கவிஞன் சான்றாண்மைப் பாரதியார் இந்துமத அபிமான சங்கத்தில் வந்தநாள் இந்தநாள் என்பதனை இனியமுறை கொண்டாட ஊர்முழுதும வலமவந்து உவகையுடன் அமர்ந்துள்ள பாரதிதமிழ்க் கழகத்துப் பண்பாளர்க் கென்வணக்கம் அடக்கமுள்ள நடராசன் தொடங்கிவைத்துச் சிறப்பிக்க அடுத்துவரும் கருத்தரங்கம் அதைநடத்தக் காத்திருக்கும் நற்கதை நம்பியாம் நம்முடைய அய்க்கணுக்கும இச்சங்கச் செயலர் இராமசாமி அவர்களுக்கும அழகான சிறப்புரைசொல ஆறு.மெய் யாண்டவர்க்கும் பாரதியின் பரம்பரையில் கவிதைப பயிராகி நேர்மையுள்ள கவிஞர் நிரஞ்சன் பாரதிக்கும் நெஞ்சையள்ளும செந்தமிழால் நெஞ்சார வணங்குகிறேன. இனிய திருக்குறளில் எழுசீர்கள் அமைந்ததுபோல் ஏழு கவிவாணர் இவ்வரங்கம் வந்துள்ளார் பாரதியார் கவிதைகளில் பதிந்துள்ள கருத்துகளில் பொதிந்துள்ள உண்மைகளைப் பூந்தமிழில் ஓதவந்தார் ஆள்குறை...